2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் 'அரசியல் பயிற்சிப் பாசறை'

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 18 , மு.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்;தர்களுக்கான இருநாள் 'அரசியல் பயிற்சிப் பாசறை' செயலமர்வு மட்டக்களப்பு சர்வோதயா கல்வி நிலையத்தில் நடைபெற்றது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் நேற்று வியாழக்கிழமை  நடைபெற்ற இச்செயலமர்வில், இலங்கையின் அரசியலின் சட்டதிட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இதன்போது கட்சியின் கொள்கை வகுப்பாளரும் ஆலோசகருமான அசாத் மௌலானா மற்றும் ஊடகச் செயலாளர் ஆர்.தேவராஜன், கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான பூ.பிரசாந்தன் ஆகியோரினால் கருத்துக்கள் பகிரப்பட்டன.

இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி; நிர்வாகத்தினர் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண, பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்துகொண்டனர். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்காக உயிர்நீத்தவர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு கட்சி தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் தலைமையுரையுடன் நிகழ்வு ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--