Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 20 , மு.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.லோஹித்)
மஹிந்த சிந்தனைத் திட்டத்தின் கீழ,; கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் வேண்டுகோளுக்கமைய அமைக்கப்பட்டு வரும் மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையத்தின் திறப்புவிழா எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவகீதா பிரபாகரன் தலைமையில் நடைபெறவுள்ள இத்திறப்பு விழாவில், பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ கலந்துகொள்ளவுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரம்பரியங்களை பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டு வரும் பஸ் நிலையத்தின் நிர்மாணப் பணிகளை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் நேரில் சென்று பார்வையிட்டார்.
அத்துடன் நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டுவரும் தொழில் நுட்பவியலாளர்களையும் சந்தித்து நிர்மாணப்பணிகள் தொடர்பில் கலந்துரையாடியதுடன், அங்கு அமைக்கப்பட்டுவரும் கடைத்தொகுதிகளையும் பார்வையிட்டார். சுமார் 7.5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வரும் இந்த பஸ் நிலையத்தில்; மட்டக்களப்பில் அழிந்துவரும பாரம்பரியங்கள் அங்கு ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .