A.P.Mathan / 2011 பெப்ரவரி 24 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜதுசன்)
களுவாஞ்சிக்குடி கடலில் குளித்துக்கொண்டிருந்த 8 மாணவர்களில் ஒருவரை காணவில்லை என களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பம் தொடர்பாக தெரியவருவதாவது...
சற்று முன்னர் குருமன் வெளியிலுள்ள பாடசாலையொன்றில் சாதாரண தரத்தில் கல்வி கற்கின்ற 8 மாணவர்கள் களுவாஞ்சிக்குடி கடலில் குளித்துக்கொண்டிருந்தனர். இத்தருணத்தில் ஒரு மாணவனை அலை அடித்துச் சென்றுவிட்டதாக சம்பவத்தை நேரில் கண்ட ஏனைய மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடலில் அடித்துச் செல்லப்பட்ட மாணவனை தேடும் பணியில் களுவாஞ்சிக்குடி பொலிஸாரும் இராணுவத்தினரும் மீனவர்களும் தற்சமயம் ஈடுபட்டுள்ளனர்.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026