2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

வன்முறைகளற்ற தேர்தலுக்கான கூட்டம்

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 25 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

வன்முறைகளற்ற தேர்தல் எனும் தலைப்பில் கபே அமைப்பினால் வேட்பாளர்களுக்கான கூட்டமொன்று இன்று மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.மண்டபத்தில் நடைபெற்றது.

கபே அபை;பின் தலைவர் கீர்த்தி தென்னக்கோன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் காத்தான்குடி மற்றும் ஏறாவூர் நகர சபைகள் மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபை என்பவற்றில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் என்பவற்றின் வேட்பாளர்கள், பொலிஸ் அதிகாரிகள், கபே நிறுவன உத்தியோகத்தர்கள் உலமா சபை மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்படி மூன்று உள்ளூராட்சி மன்றங்களுக்கும் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத்தேர்தலை எந்த வன்முறையுமின்றி நடத்துவதற்கு தாம் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக இங்கு கலந்து கொண்ட வேட்பாளர்கள் சம்மதம் தெரிவித்ததுடன் இதற்கு ஆதரவு தெரிவித்தும் இங்கு உரையாற்றினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--