2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

தும்பங்கேணியில் வைத்திய முகாம்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 27 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜவீந்திரா)

தும்பங்கேணி கண்ணகி வித்தியாலயத்தில் நேற்று சனிக்கிழமை திக்கோடை பொலிஸாரின் ஏற்பாட்டில் நடமாடும் ஆயுள்வேத வைத்திய முகாமொன்று நடத்தப்பட்டது.

களுவாஞ்சிக்குடி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சியம்பலாப்பிட்டிய விடுத்த வேண்டுகோளுக்கிணங்கவும் கிழக்கு மாகாண ஆயுள்வேத ஆணையாளர் வைத்தியர் திருமதி தர்மராஜாவின் அனுமதியுடனும் வெல்லாவெளி பொலிஸ் நிலைய அத்தியட்சகர்
வெலகெதரவின் திட்டமிடலுடன் திக்கோடை பொலிஸ் நிலைய அத்தியட்சகரின் உதவியுடனும்  இவ்வைத்திய முகாம் நடத்தப்பட்டது.

தும்பங்கேணி, திக்கோடை, களுமுந்தன்வெளி, காந்திபுரம், சுரவணையடியூற்று போன்ற கிராமங்களிலிருந்து சுமார் 600இற்கும் மேற்பட்ட   மக்கள் வந்து சிகிச்சை பெற்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--