2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

வெள்ள பாதிப்பிற்குள்ளான பிரதேசங்களின் அபிவிருத்தி தொடர்பான கூட்டம்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 27 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி, ரி.லோஹித், கே.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பாக ஆராயும் விசேட கூட்டமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர் குமார் வெல்கம, பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா விநாயகமூர்த்தி முரளிதரன், பசீர் சேகுதாவூத், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் சுஇபா,; மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உட்பட கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள் பிரதேச செயலாளர்கள் கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீதிகள், நீர்ப்பாசனக்குளங்கள், பாடசாலைகள் மற்றும் குளங்கள் என்பவற்றை அபிவிருத்தி செய்வது தொடர்பாக ஆராயப்பட்டதுடன் விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்குவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலைக்கான பணம் எனும் திட்டம் தொடர்பாகவும் அதை உடனடியாக ஆரம்பிக்குமாறும் அமைச்சர் பசில் ராஜக்ஷ இதன்போது அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். வேலைக்கான பணம் எனும் திட்டத்தின் கீழ் காழ்வாய்கள், வீதிகள், வடிகான்கள் போன்றவை துப்பரவு செய்யப்படவுள்ளன. இதற்காக வேலை செய்யும் ஒருவருக்கு ஒரு நாளைக்கு 500ரூபா வீதம் வழங்ப்படவுள்ளதாகவும் அமைச்சர் பசில் இதன் போது தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--