2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

மட்டு. எல்லைப்புற கிராம மக்களுக்கு காணி உறுதிகள் வழங்க நடவடிக்கை: மீள்குடியேற்ற பிரதியமைச்சர்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 03 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

கடந்தகால யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீள்குடியேறி வருகின்ற மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட எல்லைப்புற தமிழ் மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளுக்கு காணி உறுதிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

இப்பகுதிக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்ட பிரதியமைச்சர் அப்பகுதி மக்களை சந்தித்து கலந்துரையாடியபோதே இதனைக் கூறினார்.

தாம் நீண்டகாலமாக இப்பகுதியில் குடியேறி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றபோதிலும,; இதுவரையில் தமது காணிகளுக்கான உறுதிகள் வழங்கப்படவில்லையென அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர். அத்துடன், தமது பகுதிகளில் வெளியிடங்களிலிருந்து மாடுகளை கொண்டு வந்து மேய்ச்சலுக்கு விடுவதால் தமது பயிர்கள் அழிவதாகவும்; மேய்ச்சல் தரைக்கென அரசாங்கத்தால் பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளபோதிலும் அங்கு மாடுகள் கொண்டு செல்லப்படுவதில்லையெனவும் தமது பகுதிகளிலேயே மேய்ச்சலுக்கு மாடுகளை விடுவதாகவும் பிரதியமைச்சரிடம் மக்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இதனைத்  கவனத்தில்கொண்ட மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மக்களின் வாழ்விடங்களின் பகுதிகளில் மாடுகளை மேயவிடும் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்தார். அத்துடன்,; காணி உறுதி இல்லாதவர்களுக்கு காணி உறுதிகளை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்நிகழ்வில் மீள்குடியேற்ற அமைச்சின் இணைப்புச்செயலாளர்களான பொன்.ரவீந்திரன், ருத்திரமலர் ஞானபாஸ்கரன், மாவட்ட செயலக காணி உத்தியோத்தகர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--