2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

மணல் மேடாக காட்சியளிக்கும் ஓட்டமாவடி பாலத்திற்கு அருகிலுள்ள கரையோரப் பிரதேசங்கள்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 27 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு, ஓட்டமாவடி பாலத்திற்கு அருகிலுள்ள கரையோரப் பிரதேசங்களில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றுமணல் வார்க்கப்பட்டு அப்பிரதேசம் தற்போது மணல்மேடாக காட்சியளிக்கின்றது.

ஓட்டமாவடி, நாவலடி, பிரைந்துரைச்சேனை, மாஞ்சோலை, மீராவோடை, காவத்தமுனை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது பொழுதுபோக்கை களிக்கும் இடமாக இப்பிரதேசங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

பாசிக்குடாவிற்கு அண்மித்த பிரதேசமாகக் இது காணப்படுவதினால் இதனை சிறுவர் பூங்காவாக அமைத்துத் தருமாறு அப்பிரதேச மக்கள் ஓட்டமாவடி பிரதேசசபைத் தவிசாளரிடம் கோரியுள்ளனர்.

இதேவேளை, சில ஆலை முகாமையாளர்கள் தங்களுக்கு சொந்தமான காணியென உரிமை கொண்டாட முயன்றபோது பொதுமக்களும் பொலிஸாரும் இணைந்து கிழக்கு மாகாணக் காணி ஆணையாளரிடமும்  மட்டக்களப்பு சுற்றாடல் அதிகாரியிடமும் முறையிட்டுள்ளனர்.

இந்நிலையில், அதிகாரிகள் தனியார் எவரும் கட்டுமாணப் பணிகள், மணல் அகழ்வு நடவடிக்கைகளை உடன் நிறுத்துமாறும் உத்தரவிட்டுள்ளனர். அத்துடன் வாழைச்சேனைப் பொலிஸார் சம்பந்தப்பட்டோருக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .