2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மட்டக்களப்பு சிறைச்சாலையில் பெண் கைதிகளுக்கு தொழிற் பயிற்சி

Kogilavani   / 2011 ஜூன் 08 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள பெண் கைதிகளுக்கு ஆறு மாதகால தொழிற் பயிற்சிகள் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், பனை அபிவிருத்தி சபை தலைவர் பசுபதி சீவரட்னம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயிற்சி நெறியை ஆரம்பித்து வைத்தார்.

பாரம்பரிய கைத்தொழில் அபிவிருத்தி  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலில், அமைச்சின் கீழுள்ள இலங்கை பனை அபிவிருத்தி சபையினால் இப்பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சிறைச்சாலை நலன்புரி அதிகாரி எஸ்.ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.

பயிற்சியின் நிறைவில் ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் தலா 10ஆயிரம் ரூபாய் நிதி உதவியுடன் தொழிலுக்கான உபகரணங்களும் வழங்கப்படவுள்ளன.

இப்பயிற்சி நெறியில் 15 பெண் கைதிகள் இணைக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய ஆரம்ப நிகழ்வில் சிறைச்சாலை அத்தியட்சகர் கித்சிறி பண்டார, பனை அபிவிருத்தி சபையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பதிகாரி திருமதி சந்திரகாந்தன், சிறைச்சாலை நலன்புரி அதிகாரி எஸ்.ஸ்ரீனிவாசன் உட்பட சபையின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .