Kogilavani / 2011 ஜூன் 09 , மு.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு மாநகர சபை சிறுவர் பூங்கா அமைந்துள்ள இடத்தில் முதன் முறையாக வலது குறைந்த சிறுவர்களுக்கான சிறுவர் பூங்காவொன்று இன்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
சர்வதேச வலது குறைந்தோர் அமைப்பின் பத்து லட்சம் ரூபா நிதியொதுக்கீட்டின் கீழ் இப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இப்பூங்காவை மாநகர மேயர் திருமதி சிவகீத்தா பிரபாகரன் திறந்து வைத்தார்.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் கே.சிவநாதன் மற்றும் சர்வதேச வலது குறைந்தோர் அமைப்பின் (ஹென்றிகப்ட் இன்ரநெசனல்) கிழக்கு பிராந்திய இணைப்பாளர் பகீதரன் உட்பட மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்த்தர்கள், சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது வலது குறைந்த சிறுவர்களின் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
.jpg)
.jpg)
28 Jan 2026
28 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 Jan 2026
28 Jan 2026