Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2011 ஜூன் 10 , மு.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி,ஜிப்ரான்)
மாணவர்கள் தங்களது கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது பல்வேறு விடயங்களை கருத்திற்கொள்ள வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் கற்றலுக்கு அமைதியானதும், தனியானதுமான ஓர் சூழல் முக்கியமானது என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் மாணவர் விடுதியை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,
ஒரு மாணவன் தான் கற்ற பாடங்களை அன்றோ அல்லது பல நாட்கள் கழித்தோ மீளக்கற்றல் எனபது மிகவும் அவசியமாதொன்றாகும். இவ்வாறான மீளக் கற்றல் நடவடிக்கைகளுக்கு தனிமையான ஓர் சூழல் முக்கியமானது என்று தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்கள் தங்கி இருந்து கற்றல் நடவடிக்கைளை மேற்கொள்ளும் பொருட்டு பாடசாலை நிர்வாகம் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் விடுத்த வேண்டுகோளையடுத்து மேற்படி கட்டிடத்திற்கான நிதியினை முதலமைச்சர் ஒதுக்கீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Jul 2025
05 Jul 2025