Kogilavani / 2011 ஜூன் 10 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்,எம்.சுக்ரி)
ஜேர்மன் நாட்டைச்சேர்ந்த கைத்தொழில் தூதுக்குழுவினர் இன்று காலை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்தனர்.
இவர்களுக்கும் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் பிரதி நிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன அலுவலகத்தில் நடைபெற்றது.
சம்மேளன தலைவர் கே.ரஞ்சிதமூர்திதி தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் ஜேர்மன் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் அதிகாரி றொடின்கோ தலைமையிலான அதிகாரிகள் குழுவினரும், காத்தான்குடி நகர சபை தலைவர் அஸ்பா, சம்மேளன பிரதிநிதிகள், அதன் முகாமையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது, நடுத்தர வர்த்தகர்களின் பிரச்சினைகளை கண்டறிந்து அதனை தீர்த்து வைப்பது தொடர்பிலும் சிறு முயற்சியாளர்களின் பொருளாதார பிரச்சினை மற்றும் சட்ட சிக்கல்கள், வங்கிக்கடன் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
.jpg)
27 minute ago
44 minute ago
47 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
44 minute ago
47 minute ago
1 hours ago