2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

அங்கவீனமுற்றவர்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்த நிதியுதவி

Kogilavani   / 2011 ஜூன் 15 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

போரதீவுபற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட அங்வீனர்களின் வாழ்வாதாரத்துக்காக அரசாங்கம் நிதியுதவியினை வழங்கியுள்ளது.

போரதீவுபற்று பிரதேச செயலாளர் உதயசிறிதர் தலைமையில் நேற்று செவ்வாக்கிழமை இடம்பெற்ற இந் நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இதற்கான கொடுப்பணவுகளை வழங்கிவைத்தார்.

இதன்படி  23 பேருக்கான கொடுப்பணவுகள் வழங்கப்பட்டதுடன் எதிர்காலத்தில் அங்கவீனர்களுக்கான  விசேட செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மீள்குடியேற்ற அமைச்சின் இணைப்பு செயலாளர் பொன்.ரவீந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .