2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

காத்தான்குடி பாடசாலையில் ஐந்து வருடங்களாக பாவிக்க முடியாதுள்ள பஸ் வண்டி

Super User   / 2011 ஜூன் 16 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலயத்தில் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக பாவிக்க முடியாத பஸ் வண்டியொன்று வைத்த இடத்திலேயே இருக்கின்றது.

அரசாங்கத்தின் அனுசரனையுடன் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனமொன்றினால் 2006ஆம் ஆண்டு இந்த பஸ் வண்டி காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலயத்திற்கு வழங்கப்பட்டது.

சுனாமி அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட பாசாலைகளுக்கு பஸ் வண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் இந்த பஸ் வண்டி  மீரா பாலிகா மகா வித்தியாலயத்திற்கு வழங்கப்பட்டது.

இந்த பஸ் வண்டி வழங்கப்பட்டு பின்னர் ஒரு தடவை பயன்படுத்தப்பட்டுள்ளது. அன்றிலிருந்து இன்று வரை அந்த பஸ் வண்டி வைத்த அதே இடத்திலேயே தற்போதும் உள்ளது.

இந்த பஸ் வண்டி பழுதடைந்திருப்பதால் இந்த பஸ் வண்டியை பாவிக்க முடியாமலுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .