2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

பிரித்தானிய எம்.பியுடன் காத்தான்குடி நகர சபை எதிர்க்கட்சி தலைவர் லண்டனில் சந்திப்பு

Super User   / 2011 ஜூன் 20 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி நகர சபையின் எதிர்க்கட்சி தலைவரும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினருமான பொறியியலாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி க்வாஸி கவாட்டுடென்ஜுனுடன் அண்மையில் பேச்சு நடத்தினார்.

கடந்த வாரம் அப்துர் ரஹ்மான் இங்கிலாந்துக்கு விஜயம் மேற்கொண்ட போது பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரை அவர் சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தை மையப்படுத்தி மேற்கொள்ளும் வேலைத்திட்டங்கள் மற்றும் காத்தான்குடி நகர சபை ஊடாக முன்னெடுக்கப்பட கூடிய முக்கிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு பிரித்தானிய நிறுவனங்களின் உதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.


 


  Comments - 0

  • abdullah Tuesday, 21 June 2011 05:33 PM

    பிரயோசனம் அற்ற சந்திப்பு

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X