2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

வாகரையில் ஆதிவாசிகளின் தினம்

Kogilavani   / 2011 ஜூன் 24 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர். அனுருத்தன்)

வாகரை, பனிச்சங்கேணி சல்லித்தீவில் எதிர்வரும் ஜூலை மாதம் 30, 31 திகதிகளில் சர்வதேச ஆதிவாசிகளின் தினம் கொண்டாடப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு வாகரை பிரதேசத்திற்கு ஆதிவாசிகளில் தலைவர் ஊர்வர்கே வன்னி அத்தலோவும் அவரது குழுவினரும் திடிர் விஜயமொன்றை நேற்று வியாழக்கிழமை மாலை மேற்கொண்டிருந்தனர்.

இக் குழுவினருடன் இணைந்து வடக்கு கிழக்கு மாகாண சபை முன்னாள் தலைமைச் செயலாளர் பி. கிருஸ்ணமுர்த்தியும் விஜயமேற்கொண்டிருந்தனர்.

இதன்போது, அப்பகுதியிலுள்ள ஆதிவாசிகளின் தொடர்பை பெற்றுக்கொள்வதற்கான கலந்துரையாடல் வாகரை 233 ஆவது படைப்பிரிவின் இராணுவ கட்டளைத் தளபதி திலக் வீரக்கோன் தலைமையில் இடம்பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X