2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

மட்டு - ஊறனி பிரதான வீதியில் இருதயநாதர் சொரூபம்

Menaka Mookandi   / 2011 ஜூன் 24 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு, இருதயபுரத்திலுள்ள இருதயநாதர் ஆலயத்தின் ஐம்பதாவது வருட பொன்விழாவையொட்டி மட்டக்களப்பு - ஊறனி பிரதான வீதியில் ஆலயத்தின் சொரூபமொன்றை அமைப்பதற்கான அடிக்கல் இன்று நாட்டி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன் மற்றும் பிரதி மேயர் ஜோர்ஜ் பிள்ளை, ஆலய பங்குத்தந்தை அருட் ஆர்.திருச்செல்வம் உட்பட ஆலய நிருவாகிகள், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு இதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.

இருத நாதர் ஆலயத்தில் இன்று மாலை கொடியேற்றப்பட்டு எதிர்வரும் 3ஆம் திகதி திருவிழா நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .