Super User / 2011 ஜூலை 15 , மு.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
கிழக்கு மாகாண இளைஞர் முகாம் இன்று வெள்ளிக்கிழமை மாலை புதுக்குடியிருப்பு இளைஞர் பயிற்சி நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் கிழக்கு மாகாணம் தழுவிய வகையில் நடைபெறும் இந்த இளைஞர் முகாமை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆரம்பித்து வைத்தார்.
ஆரம்ப வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பி.பிரசாந்தன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் கே.தவராஜா மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட உதவி பணிப்பாளர்கள், இளைஞர் சேவை அதிகாரிகள் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைமையக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த இளைஞர் முகாமில் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தமிழ், சிங்கள, முஸ்லிம் இளைஞர் யுவதிகள் 250 பேர் பங்குபற்றியுள்ளனர்.
10 minute ago
26 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
26 minute ago
35 minute ago