Freelancer / 2026 பெப்ரவரி 17 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணியும் அவரது மனைவியும் படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு தழுவிய ரீதியில் சட்டத்தரணிகள் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, உயர்நீதிமன்றம் முதல் நீதவான் நீதிமன்றங்கள் வரை அனைத்து மட்டங்களிலும் சட்டத்தரணிகள் கடமைகளில் இருந்து விலகியிருந்தனர்.
சட்டத்தரணிகளின் இந்த அடையாளப் போராட்டம் காரணமாக நாடளாவிய ரீதியில் சுமார் 1,000 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன.
சந்தேகநபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட போதிலும், அவர்கள் சார்பாக முன்னிலையாக சட்டத்தரணிகள் முன்வராததால், சில நிமிடங்களிலேயே வழக்குகள் புதிய திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டன. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .