Suganthini Ratnam / 2011 ஜூலை 17 , மு.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஆர்.அனுருத்தன்)
மட்டக்களப்பு, மாவடிச்சேனையைச் சேர்ந்த மக்களுக்கான நடமாடும் சேவையொன்று நேற்று சனிக்கிழமை நடத்தப்பட்டது.
தேசிய மொழிகள் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு, யு.என்.டி.பி. நிறுவனம் ஆகியன கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்துடன் இணைந்து இந்த நடமாடும் சேவையை நடத்தியது.
மட்டக்களப்பு, மாவடிச்சேனை இக்பால் வித்தியாலயத்தில் நடத்தப்பட்ட இந்த நடமாடும் சேவையில் அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது பிறப்பு மற்றும் இறப்பு பத்திரங்கள், திருமணச் சான்றிதழ் பிரதிகள், காணாமல் போனவர்களுக்கான மரணப்பதிவு மற்றும் தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பித்து அவைகளுக்கான தீர்வினையும் பெற்றுக்கொண்டார்கள்.
இதன்போது பொதுமக்களின் சட்ட ஆவணங்களுக்கான விண்ணப்ப முத்திரைகளும் தேசிய அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுத்தலும் யு.என்.டி.பி. நிறுவனத்தின் நிதியை சமமாக அணுகும் கருத்திட்டத்தின் நிதியுதவி மூலம் இலவசமாக வழங்கப்பட்டன.
அத்துடன், பொதுமக்களுக்கான பொலிஸ் முறைப்பாட்டு பிரதிகளும் இலகுவான முறையில் இந்த நடமாடும சேவை மூலம் வழங்கப்பட்டன.
இந்த நடமாடும் சேவையை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எம்.எஸ்.நிகாரா, மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.ஜ.மாஜிதின், யு.என்.டி.பி. நிறுவனத்தின் திட்ட உதவியாளர் சட்டத்தரணி ஏ.ஆர்.எம்.சுல்பி ஆகியோர் வைபவ ரீதியாக ஆரம்பித்துவைத்தனர்.
இதேவேளை, நேற்று அந்நூர் தேசிய பாடசாலையில் வாழைச்சேனை பகுதி மக்களின் நலன் கருதி நடமாடும் சேவையொன்று நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
7 minute ago
24 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
24 minute ago
57 minute ago