Menaka Mookandi / 2011 செப்டெம்பர் 13 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கே.எஸ்.வதனகுமார், ஜிப்ரான்)
புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயப் பாடசாலைகளுக்கு 75 இலட்சம் ரூபா பெறுமதியான கணினிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்கள் இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தனால் வழங்கப்பட்டன.
இக்கணினிகளை கையளிக்கும் நிகழ்வு மட்டு. கன்னங்குடா மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் வலயக்கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் முதலமைச்சர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு குறித்த பாடசாலைகளுக்கு கணினிகளைக் கையளித்தார்.
கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களின் கணினி அறிவினை மேம்படுத்துவதன் ஊடாக தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினை ஏற்படுத்துவதற்கு இந்திய அரசாங்கத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய சுமார் 7 கோடி ரூபா பெறுமதியான கணினிகள் இந்திய அரசினால் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு வழங்குவதற்கு அண்மையில் வழங்கப்பட்டன.
இக்கணினிகள் கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் மட்டக்களப்பு மேற்கு வலயப் பாடசாலைகளுக்கும் அவற்றில் ஒரு தொகுதி வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் வவுணதீவு பிரதேச தவிசாளர் கா.சுப்பிரமணியம், மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் திருமதி சா.பவளகாந்தன், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பிரதி கல்விப்பணிப்பாளர் ஜி.சிறிநேசன், வவுணதீவு பிரதேச உப தவிசாளர் ஜெயராஜ் உட்பட கோட்ட கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
5 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
25 Oct 2025