2021 மே 15, சனிக்கிழமை

ஈரான் தூதுக்குழு - இந்து சமய தலைவர்கள் சந்திப்பு

Super User   / 2011 செப்டெம்பர் 14 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி, ஜிப்ரான்)

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஈரான் உயர் மட்ட தூதுக்குழு இன்று புதன்கிழமை மட்டக்களப்புக்கு மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டனர்.

இந்த விஜயத்தின் போதுஇ மட்டக்களப்பிலுள்ள இந்து சமய தலைவர்களை கிங்பிஸ் விடுதியில் சந்தித்து பேச்சு நடத்தினர்.

இதன்போது, இரு தரப்பினருக்கும் இடையில் இன ஜக்கியம் மற்றும் சமயங்களுக்கிடையிலான நட்புறவு தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. ஈரான் தூதுக்குழுவினர் மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதய நிலைமைகள் குறித்தும் இதன்போது கேட்டறிந்து கொண்டனர்.

ஈரான் சர்வ மதங்களுக்கிடையிலான ஒற்றுமை அமைப்பின் தலைவர் கலாநிதி ஜவாத் சாகிரி மற்றும் ஈரான் பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி ஹுஜ்ஜத்துல் இஸ்லாம் பாராணி உள்ளிட்ட பல்வேறு துறை சார்;ந்த எட்டு பேர் இத்தூதுக்குழுவில் உள்ளடங்குகின்றனர். (படங்கள்: எம்.சுக்ரி)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .