2021 மே 06, வியாழக்கிழமை

சிறாஜ் அரபுக் கல்லூரிக்கு தளபாடங்கள் அன்பளிப்பு

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 16 , மு.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி சிறாஜ் அரபுக் கல்லூரிக்கு வகுப்பறைக்கான தளபாடங்களும் கணினியறைக்கான தளபாடங்களும் நேற்று வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான எஸ்.ஜவாஹிர் சாலி மற்றும் எம்.எச்.எஸ்.இஸ்மாயிலின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டிலிருந்து மேற்படி தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அரபுக் கல்லூரியின் தலைவர் எம்.எஸ்.எம்.அஸ்ரப் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான எஸ்.ஜவாஹிர் சாலி மற்றும் எம்.எச்.எஸ்.இஸ்மாயில் தளபாடங்களை வழங்கி வைத்தனர். இதன்போது கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.யூ.எம்.றிஸ்வி மற்றும் ஜமாதே இஸ்லாமியின் கல்குடாப் பிராந்திய சூரா சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .