2021 மே 18, செவ்வாய்க்கிழமை

கல்விமாணி கற்கை நெறிப்பயிலும் புதிய ஆசிரியர் மாணவர்களுக்கு வரவேற்பு

Kogilavani   / 2011 செப்டெம்பர் 17 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

தேசிய கல்வி நிறுவகத்தின் மட்டக்களப்பு நிலையத்தில் 2011/2013ஆம் ஆண்டு கல்விமாணி பட்ட கற்கை நெறிக்கு நுழையும் புதிய ஆசிரிய மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வும் கௌரவிப்பும் இன்று காலை மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

2009/2011ஆம் ஆண்டு மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிசய கல்வி நிறுவகத்தின் மட்டக்களப்பு நிலையத்தின் மட்டக்களப்பு பணிமனை இணைப்பாளரும், மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலை அதிபருமான ஏ.எஸ்.யோகராஜா தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பதிதியாக ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் ஆர்.பாஸ்கரன் கலந்து கொண்டார்

இந்நிகழ்வில், பழைய மாணவர்களான திருமதி பி.ஏ.காதர்,  திருமதி ஏ.நல்லதம்பி ஆகியோர் விரிவுரையாளார்களான  எம்.கோமளேஸ்வரன், யோகேந்திரன் ஆகியோரால் கௌரவிக்கப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .