2021 மே 15, சனிக்கிழமை

பரீட்சைகளில் சிறப்பான சித்திகளை பெற்ற மாணவர்கள் கௌரிவிப்பு

Kogilavani   / 2011 செப்டெம்பர் 18 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)
மட்டக்களப்பு மாவட்ட இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில்   புலமைப்பரிசில், க.பொ.த.சா/த, உயர்தர பரீட்சையில் சிறப்பான சித்திபெற்ற சங்க அங்கத்தவர்களின் பிள்ளைகள்  மற்றும் ஓய்வு பெற்ற இலங்கை வங்கி ஊழியர்களைக் கௌவிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், கடந்த2009, 2010ஆம் ஆண்டுகளில், புலமைப்பரிசில், க.பொ.த.சா/தர, உயர்தர பரீட்சைகளில் சிறப்பான சித்திகளை பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன்,  2006 முதல் 2010 வரை ஓய்வு பெற்ற இலங்கை வங்கி ஊழியர்கள் பலரும் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில், இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் அமரபால கமகே, சிரேஸ்ட உதவித் தலைவர் விமல சந்திரசேன, மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் ஏ.ரு.ஏ.அன்சார், சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் பொதுச் செயலாளர் எஸ்.அழகுராஜா, உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .