2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு மாகாண சபையின் செயற்றிட்ட மீளாய்வு கூட்டம்

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 22 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

கிழக்கு மாகாண சபையின் செயற்றிட்ட மீளாய்வு விசேட கூட்டம் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் திருகோணமலையிலுள்ள மாகாணசபை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
 
இக்கூட்டத்தில் இவ்வருடத்திற்கான நிதி ஒதுக்கீடுகளின் குறைநிறைகள் மற்றும் வருட இறுதியில் முடிவுறுத்தப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக மீளாய்வு செய்யப்பட்டது.
 
கிழக்கு மாகாண பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், பணிப்பாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .