2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

இளைஞர் யுவதிகளுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறி

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 27 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு, தாண்டவன்வெளி கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கான தலைமைத்துவமும், தொழில் வழிகாட்டலுக்குமான பயிற்சி நெறி தாண்டவன்வெளி பேடினன்ஸ் மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது

நிகழ்வின் அதிதிகளாக குருத்துவ வாழ்வில் 23 ஆண்டுகளை நிறைவு செய்த பங்குத்தந்தை இன்னாசி ஜோசப், பிராந்திய கிறிஸ்தவ வாழ்வு தலைவர் நேரு மோசஸ், திருமதி மோசஸ்,  தலைவர் டிலோண் மற்றும் வளவாளர்களான கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் ஜீவரெட்ணம் கெனடி திருமதி பி.இவானி ஆகியோர் நெறிப்படுத்தினர்.

சுமார் 40க்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் இதில் கலந்து கொண்டனர். அத்துடன், குருத்துவ வாழ்வில் 23 ஆண்டுகளை நிறைவு செய்த அருட்தந்தை இன்னாசி ஜோசப் அடிகளாருக்கு தாண்டவன்வெளி கிறிஸ்தவ வாழ்வு சமுகத்தின் சார்பில் அதன் உபதலைவர் செல்வன் றஜீவினால் நினைவுச் சின்னமும் அன்பளிப்பும் வளங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • lesley Wednesday, 28 September 2011 12:20 AM

    உங்கள் பனி தொடர எனது வாழ்த்துக்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .