Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 03 , மு.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
இலங்கையின் மதுரை மீனாட்சியம்மன் ஆலயமென அழைக்கப்படும் போரதீவு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் உற்சவகால நிதி நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக மாவட்ட அரசாங்க அதிபரை விசேட ஆணையாளராக நியமித்த மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றம், அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அறிவித்துள்ளது.
போரதீவு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற்று வரும் இவ்வேளையில் ஆலய நிர்வாகத்தினர் நிதி மோசடியில் ஈடுபடலாமெனவும் நிர்வாகத்தின் மீது நம்பிக்கையில்லையெனவும் கூறி மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில் முனைத்தீவு பிரதேச மக்களால் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இதனை விசாரணை செய்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி, உற்சவகாலத்தில் மேற்கொள்ளப்படும் நிதி நடவடிக்கைகள் தொடர்பில் ஆய்வு செய்யவும் இதற்காக மாவட்ட அரசாங்க அதிபரை விசேட ஆணையாளராக நியமிக்குமாறும் பணிப்புரை விடுத்தார்.
இதன்படி எதிர்வரும் 12ஆம் திகதி வரை விசேட ஆணையாளராக மாவட்ட அரசாங்க அதிபர் செயற்படவுள்ளதுடன் அது தொடர்பான அறிக்கையையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago