2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

சுகாதார விழிப்புணர்வு வைபவம்

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 04 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

தேசிய சுகாதார வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை சுகாதார விழிப்புணர்வு வைபவமொன்று நடைபெற்றது.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எல்.எம்.பரீட், பி.பிரசாந்தன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சந்தரம் அருமைநாயகம், மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் எம்.சதுர்முகம் உட்பட சுகாதார அதிகாரிகள் வைத்தியசாலைகளின் வைத்தியர்கள், மருத்துவ சுகாதார அதிகாரிகள் வைத்திய நிபுணர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

இதன்போது தொற்றுநோய் மற்றும் ஏனைய நோய்கள் தொடர்பான விழிப்புணர்வு உரைகள் தேசிய சுகாதார வாரத்தின் வேலைத்திட்டங்கள் என்பன தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X