2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

இடை விலகிய மாணவர்களை பாடசாலையில் மீள இணைக்கும் நடவடிக்கையில் பொலிஸார்

Super User   / 2011 ஒக்டோபர் 05 , மு.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.எஸ்.வதனகுமார்)

வாகரை பிரதேசத்தில் பாடசாலைக்கு செல்லாத மாணவர்களை அடையாளம் கண்டு பாடசாலை கல்வியில் மீள இணைக்கும் நடவடிக்கை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
 
பொலிஸ் - பொது மக்கள் உறவினை பேணும் சிவில் பாதுகாப்பு குழுக்கள் ஊடாகவே இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த  திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இரு வார காலத்திற்குள் இதுவரை நான்கு பாடசாலைகளில 65இற்கு மேற்பட்ட மாணவர்கள் மீண்டும் பாடசாலைகளில் இணைக்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித ஜயரத்ன தெரிவித்தார்.

மீண்டும் கல்வி செயற்பாட்டில் இணைக்கப்பட்ட இம்மாணவர்கள் பாடசாலைக்கு ஒழுங்காக செல்கின்றார்களா, வீட்டில் படிக்கின்றார்களா, மற்றும் வெளியிடங்களில் அவர்களின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது என்பன குறித்து சிவில் பாதுகாப்பு குழுக்கள் மூலம் கண்காணிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மாணவர்களின் இடைவிலகலுக்கு வறுமை, தொழிலுக்கு செல்லுதல், பெற்றோருடன் தொழில் நிமித்தம் இடம் பெயர்வு போன்றனவே காரணமாக அமைவதாக பாடசாலை அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--