Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 05 , மு.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
எஹெட் கரித்தாஸ் நிறுவனத்தின் மட்டக்களப்பு மற்றும் கல்முனை பிராந்தியங்களுக்கான புதிய இயக்குநராக பதவியேற்றுள்ள அருட்தந்தை கிறைற்றன் அவுட்ஸ்கோனை வரவேற்கும் வைபவமும் எஹெட் நிறுவனத்தில் 13 வருடங்கள் கடமையாற்றிய அருட்தந்தை சிறிதரன் சில்வஸ்ரரை கௌரவிக்கும் வைபவமும் மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள விடிவானம் தாய்ச்சங்கம் ஏற்பாடு செய்த இந்த வைபவத்தில் எஹெட் கரித்தாஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் அருட்தந்தை கலாநிதி சிறிதரன் சில்வஸ்ரர், அதன் ஆளணி முகாமையாளர் எஸ்.தர்மகுலராஜா மற்றும் முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
புதிய இயக்குநராக பதவியேற்றுள்ள அருட்தந்தை கிறைற்றன் அவுட்ஸ்கோனுக்கு வரவேற்பளிக்கப்பட்டுள்ளதுடன், 13 வருடங்கள் எஹெட் நிறுவனத்தில் இயக்குநராக கடமையாற்றிய அருட்தந்தை சிறிதரன் சில்வஸ்ரரும் கௌரவிக்கப்பட்டார்.
10 minute ago
34 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
34 minute ago
47 minute ago