2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் - ஈராக் தூதுவர் சந்திப்பு

Super User   / 2011 ஒக்டோபர் 07 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 


சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்விற்கும் இலங்கைக்கான ஈராக் தூதுவர் கஹ்தான் தாஹா காலாப் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு அண்மையில் இடம்பெற்றுள்ளது.

அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்குமிடையிலான உறவை கட்டியெழுப்புதல் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஈராக் அரசினால் மீண்டும் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏறாவூரில் ஈராக் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள சதாம் ஹுஸைன் கிராமத்தை மீண்டும் கட்டியெழுப்புவது தொடர்பாகவும் பிரதியமைச்சருடன் ஈராக் தூதுவர் இச்சந்திப்பில் கலந்துரையாடியுள்ளார்.

ஈராக் தூதுவருடனான இச்சந்திப்பில் கொழும்பிலுள்ள ஈராக் தூதவராலயத்தின் முதலாவது செயலாளர் அலி தாலிபும் கலந்துகொண்டிருந்தார்.

 

 


  Comments - 0

  • Ashashi Sunday, 09 October 2011 04:00 PM

    அமைச்சர் அவர்களே, அவங்களே பாவம் வழியில்லாமல் இருக்கிறாங்க please அவர்களிடம் ஒண்ணுமே கேட்க வேண்டாம். உங்களால் முடியுமாக இருந்தால் ஏதாவது அவர்களுக்கு உதவி செய்து அனுப்புங்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--