Kogilavani / 2011 ஒக்டோபர் 09 , மு.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஸரீபா)
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் உலக வங்கி பிரதி நிதிகளுக்குமிடையிலான சந்திப்பு நேற்று சனிக்கிழமை ஓட்டமாவடி பிரதேச சபையில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின்போது, உலக வங்கியின் உதவியுடன் ஓட்டமாவடி பிரதான வீதியில் இயங்கி வரும் மீன் சந்தையை நவீன வசதிகளுடன் கூடிய சந்தையாக மாற்றியமைப்பது மற்றும் கோறளைபற்று மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் சிறுவர்களின் நலன் கருதி சகல வசதிகளையும் கொண்ட பாரிய பொது சிறுவர் பூங்காவினை அமைப்பது ஆகிய இரு விடயங்கள் தொடர்பாக ஆரயப்பட்டன.
இச்சந்திப்பில், பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ். ஹமீட், மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் என்.சத்தியானந்தி, மனோகரன் தலைமையிலான உலக வங்கி பிரதி நிதிகள் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago