Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 ஒக்டோபர் 11 , மு.ப. 07:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
'சமாதான வாழ்வு' எனும் தொனிப்பொருளில் அசோகச் சக்கரவர்த்தியின் வரலாற்றைக் கூறும் 'கலிங்கப்போர்' வடமோடிக் கூத்து நாளை மறுதினம் வியாழக்கிழமை வந்தாறுமூலை விஷ்னு மகா வித்தியாலய அரங்கில் அரங்கேற்றப்படவுள்ளது.
கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் வழிகாட்டலில், ஜீ.லி.இசட் நிறுவனத்தின் சமூக இசைவாக்க கல்வி பிரிவின் அனுசரணையில் இக்கூத்து அரங்கேற்றப்படவுள்ளது.
கல்குடா வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி, வந்தாறுமூலை விஷ்னு மகா வித்தியாலய ஆசிரியர் நா.சிவலிங்கேஸ்வரன், கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலய ஆசிரியர் து.கௌரீஸ்வரன் ஆகியோர் இக்கூத்தினை பிரதியாக்கம் செய்துள்ளனர்.
கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரும், மாகாணக் கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளருமான ஏ.எம்.இ.போல், ஜீ.ரி.இசட் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசகர் எம்.பவளகாந்தன், சிரேஷ்ட ஆலோசகர் எஸ்.தண்டாயுதபாணி, ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் திருமதி ரி.தினேஸ், ஜீ.ரி.இசட் ஆலோசகர் ரி.சுப்பிரமணியம், நாடக மற்றும் கூத்து கலைஞர் கலாபூசணம் தாழை செல்வநாயகம், கூத்துக் கலைஞர் குமாரவேல் நவரெத்தினம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
சித்தாண்டியைச் சேர்ந்த அண்ணாவியார் வீ.தம்பிமுத்துவும் உதவி அண்ணாவியாராக வந்தாறுமூலை விஷ்னு மகா வித்தியாலய ஆசிரியர் நா.சிவலிங்கேஸ்வரனும் இக்கூத்தில் செயற்படுகின்றனர்.
மாணவர்களுக்கு சமாதானத்தின் முக்கியத்துவத்தினை முன்நிலைப்படுத்தும் வகையில் இக்கூத்து அரங்கேற்றப்படுவதாக ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்தனர்.
23 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago
4 hours ago