2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

ஏறாவூர் அபிவிருத்திக்குழுத் தலைவராக பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத் நியமனம்

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 17 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

ஏறாவூர் பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்திக் குழுவின் தலைவராக உள்நாட்டு வர்த்தக கூட்டுறவு பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத் ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளின் பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான இந்நியமனம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் கடந்த சனிக்கிழமையன்று வழங்கப்பட்டுள்ளது. ஏறாவூர் பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்திக்குழுவின் தலைவராக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா ஏற்கனவே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--