Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 20 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.அனுருத்தன்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தை சூழவுள்ள பகுதிகளிலுள்ள சில நபர்கள் ஒழுக்கமற்ற முறையிலும் சட்டவிரோதமான செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டனப் பேரணியொன்று இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இவ்வாறான சில நபர்களின் ஒழுக்கமற்ற நடவடிக்கையும் சட்டவிரோதமான செயற்பாடுகளும் அப்பிரதேச மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு குந்தமாக அமைந்துள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் இந்த கண்டனப்பேரணி நடைபெற்றது.
இந்த கண்டனப்பேரணியில் கலந்துகொண்டவர்கள் சாதுலியா வித்தியாலயத்திலிருந்து உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தை நோக்கிச் சென்று மகஜரொன்றையும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்; காமினி தென்னக்கோனிடம் கையளித்தனர்.
பெற்றோர்களும் மாணவர்களும் பள்ளிவாசல்கள் சம்மேளனமும் சமூக அமைப்புக்களும் இணைந்து இக்கண்டனப்பேரணியை ஏற்பாடு செய்திருந்தன.
7 minute ago
55 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
55 minute ago
2 hours ago