2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

கமநல விழாவில், வறிய விவசாயிகளின் பிள்ளைகள் 42 பேருக்கு புலமைப்பரிசில்கள்

Kogilavani   / 2011 ஒக்டோபர் 22 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

(எம்.சுக்ரி,ரி.லோஹித்)

மட்டக்களப்பு கமநல அபிவிருத்தி  திணைக்களத்தின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை காலை மட்டு. மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்ற கமநல விழாவில், வறிய விவசாயிகளின் 42 பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு கமநல சேவைகள் உதவி ஆணையாளர் டாக்டர் ஆர். ருசாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கமநல அபிவிருத்தித் திணைக்கள ஆணையாளர் நாயகம் ரவீந்திர ஹேவவிதாரண, மட்டக்களப்பு மாநகர சபை மேயர் திருமதி சிவகீதா பிரபாகரன்,  கிழக்குப் பல்கலைக்கழக பதில் உப வேந்தர் கலாநிதி பிரேம்குமார், மீள்குடியேற்ற பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன் ரவீந்திரன், கமநல சேவைகள் வனஜீவராசிகள் அமைச்சின் ஒருங்கிணைப்புச் செயலாளர்  தயானந்தன், மட்டு மாநகர சபை ஆணையாளர் சிவநாதன், விவசாயத் திணைக்கள பிரதி பணிப்பாளர் ஹரிகரன், கமநல காப்புறுதி சபையின் உதவிப் பணிப்பாளர் விநாயக மூர்த்தி, வவுணதீவு பிரதேச சபையின் தவிசாளர் பிறைசூடி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, 20இற்கும் மேற்பட்ட முதிய விவசாயிகள், விவசாய உத்தியோகத்தர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் கமநல அமைப்புகளும் கொளரவிக்கப்பட்டன.

விவசாயிகளின் பிள்ளைகளின் நலனைக் கருத்தில் கொண்டு 2006, 2007ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின் படி இந்தவருடம் 44 மாணவர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபா வீதம் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாய கீதம் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர் டாக்டர் ஆர்ருசாந்தன் எழுதிய சிறிய நீர்ப்பாசன குளங்களும், நீரின் பாதுகாப்பும் எனும் நூலும், பிரதம பொறியியலாளர் எம்.எம்.முனாஸ் எழுதிய நீர்ப்பாசனக் குளங்களின் பராமரிப்புக் கையேடு எனும் நூலும் இன்றைய நிகழ்வில் வெளியிட்டு வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில், மட்டக்களப்பு விவசாய கீதத்தினை எழுதிய களுதாவiளையைச் சேர்ந்த எழுத்தாளரும் கவிஞரும் சிறந்த படைப்பாளியுமான அரசரெத்தினம், பிரபல இசையமைப்பாளர் ஜீவன் ஜோசப், ஒளிப்படங்களை எடுத்த ரதீஸ் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--