2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

வாழைச்சேனையில் மேற்கொள்ளப்பட்ட வங்கிக்கொள்ளை தோல்வி

Menaka Mookandi   / 2011 நவம்பர் 16 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல வங்கியொன்றைக் கொள்ளையடிக்கும் முயற்சி தோல்வியில் முடிவடைந்த  சம்பவமொன்று நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த வங்கியின் பின்பகுதியால் வந்துள்ள கொள்ளையர்கள் சிலரால் ஜன்னல் கதவுகள் உடைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் வங்கியினுள் இருந்த பணமோ, தங்க நகைகளோ கொள்ளையிடப்பட்டிருக்கவில்லை என்று வங்கி நிர்வாகம் தெரிவித்தது.

இன்று காலை 10.00 மணிக்கு பின் வழமைபோன்று வங்கி நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற அதேவேளை, மேற்படி சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .