2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

மண்முனை இயந்திரப்பாதை பழுதடைந்தமையினால் படுவான்கரைக்குச் செரல்வதில் பெரும் சிரமம்

Menaka Mookandi   / 2011 நவம்பர் 17 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

மட்டக்களப்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் நிருவகிக்கப்பட்டு வரும் மண்முனை ஆற்றைக் கடப்பதற்கான இயந்திரப் பாதைகளில் ஒன்று கடந்த ஒரு மாத காலமாகப் பழுதடைந்துள்ளமையினால் அவ்வாற்றின் ஊடாகப் பயணிக்கும் பெருமளவான பயணிகள் பெரும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.

இரண்டு இயந்திரப் பாதைகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில் ஒரு பாதை அடிப் பகுதியில் ஓட்டை விழுந்ததனால் மறுகரையில் நீர் ஏறிய நிலையில் உள்ளது. அதனால் ஒரு பாதையே போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படுவதனால் காலை, பகல், மாலை உள்ளிட்ட அனைத்து வேளைகளிலும் பெரும்நெரிசல் ஏற்படுகிறது. அத்துடன் பெருந்திரளானோர் பல மணிநேரம் தரித்து நின்று பயணத்தினை மேற்கொள்ள வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.

மண்முனையில் இருந்து படுவான்கரையின் கொக்கட்டிச்சோலை, மகிழடித்தீவு, தாந்தாமலை, உள்ளிட்ட பவல இடங்களுக்கும் செல்லும் அரச உத்தியோகஸ்தர்கள், வங்கி ஊழியர்கள், ஆசிரியர்கள் என பெருந்தொகையானோர் இந்தப் பாதைப் பிரச்சினையினால் பாதிக்கப்படுவதுடன், மக்களும் தமது பயணங்களினை சரியான முறையில் மேற்கொள்ள முடியாத நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X