2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

மட்டு.மாவட்டத்தில் மின்சார அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் கூட்டம்

Kogilavani   / 2011 நவம்பர் 19 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு மாவட்டத்தில் மின்சார அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மின்சக்தி அமைச்சர் சம்பிக்கரனவக்க, பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத், கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெ;வவை, இலங்கை மின்சார சபையின் உதவி முகாமையாளர் ரஞ்சித் குணவர்த்தன, கிழக்கு மாகாண பிரதி முகாமையாளர் எம்.தவநேசன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பி.அரியநேந்திரன், சி.யோகேஸ்வரன் உட்பட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்தின் மின்சார அபிவிருத்தி தொடர்பாக ஆராயப்பட்டதுடன் அதற்கான முன்மொழிவுகளும் மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து பெறப்பட்டன.


 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .