Kogilavani / 2011 நவம்பர் 20 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி,கே.எஸ்.வதனகுமார்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் பொது நலன் விரும்பிகளின் நன்கொடையுடன் நிர்மாணிக்கப்பட்ட வீடு கையளிக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில், கிழக்க மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் கே.தவராஜா, மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் ஏ.ஜே.கபூர் உட்பட மாவட்ட பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.
சுமார் எட்டு லட்சம் ரூபா செலவில் இவ்வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாடு பூராகவுமுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகள் தோறும் ஒவ்வொரு வீடும் அமைக்கும் இத்திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒவ்வொரு வீடு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
11 minute ago
21 minute ago
35 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
21 minute ago
35 minute ago
47 minute ago