2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் வெள்ளம் காரணமாக பல குடும்பங்கள் இடம்பெயர்வு

Menaka Mookandi   / 2011 நவம்பர் 24 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக மக்கள் இடம்பெயர ஆரம்பித்துள்ளனர் என்று மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவி பணிப்பாளர் எஸ்.இன்பராஜா தெரிவித்தார்.

கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கூழாக்காடு கிராமத்திலிருந்து நேற்று இடம்பெயர்ந்து பெண்டுகள்சேனை வித்தியாலயத்தில் தங்கியிருந்த 22 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இன்று காலை சொந்த இடம் திரும்பிய போதிலும் அதேபிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த பிரம்படித்தீவிலிருந்து 7 குடும்பங்கள் இடம்பெயர்ந்து இன்று காலை முதல் வாழைச்சேனை, கிண்ணையடி வித்தியாலயத்தில் தங்கியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் கடும்மழை பெய்துவருவதால் இடம்பெயர்வுகள் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .