2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

மட்டக்களப்பு வெள்ள நீரை வழிந்தோடச்செய்ய வேலைத்திட்டம்

Menaka Mookandi   / 2011 நவம்பர் 26 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஸரீபா)

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ள நீரினை வழிந்தோடச் செய்யும் வேலைத்திட்டம் ஒன்றினை கோறளைப்பற்று பிரதேச சபையினால் மேற்கொள்ளப்படுகின்றது. கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.உதயஜீவதாஸின் ஆலோசனைக்கிணங்க இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில்; உள்ள வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை, மாவடிச்சேனை போன்ற பகுதிகளில் வீதிகல் மற்றும் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் அதிகரித்துக் காணப்படுகின்றது இதனால் மக்கள் போக்குவரத்துச் செய்வதில் பல்வேறு கஸ்டங்களை எதிர் நோக்கி வந்தனர் இதனை அடுத்து தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள்; இந்த வெள்ள நீரினை வழிந்தோடச் செய்யும் வேலைத் திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே வேளை ஏறாவூரில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குக் காரணமாக ஏறாவூர் பிரதேசத்தில் மீள் குடியேற்றக் கிராமமான முஹாஜிரீன் கிராமம் முற்றாக நீரில் மூழ்கியுள்ளது இதனால் 10 குடும்பங்கள் தங்களது இருப்பிடங்களைவிட்டு இடம் பெயர்ந்து கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடத்தில் தங்கியுள்ளனர்.

இப்பிரதேச மக்கள் 1990ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அசாதாரன சூழ்நிலையையடுத்து உறுகாமம் பிரதேசத்தில் இருந்து இடம் பெயர்ந்து முஹாஜிரீன் கிராமத்தில் வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X