Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 நவம்பர் 27 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஸரீபா)
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நெற்காணிகள் தொடர்பான விபரங்களை பார்வையிடும் பணிகளில் விவசாய பெரும்போக உத்தியோகத்தர்கள் ஈடுபட்டு வருதாக மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர் டாக்டர் ஆர்.ருஷாந்தன் தெரிவித்தார்.
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அந்தந்த பகுதிகளிலுள்ள கமநலசேவை நிலையங்களில் பாதிப்புத் தொடர்பான பதிவுகளை மேற்கொள்ளுமாறும் அவர் விவசாயிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த ஒரு வாரகாலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டிருந்த அடை மழை காரணமாக மாவட்டத்திலுள்ள அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட வயல் நிலங்கள் வெள்ளத்தினால் மூழ்கியிருந்தன. நேற்று முதல் மழை இல்லாத காரணத்தினால் வெள்ளம் குறைந்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
இந்த நிலையில், சீரற்ற காலநிலை ஓரளவு தணிந்துள்ளதையடுத்து விவசாயிகள் தங்களது வயல் நிலங்களில் வேலைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
46 minute ago
49 minute ago
59 minute ago