2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

வெள்ள நிவாரண மானியக் கொடுப்பனவு

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 30 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் புதிய வீடுகளை அமைப்பதற்காக வெள்ள நிவாரண மானிய முதலாம் கட்ட கொடுப்பனவிற்கான காசோலைகள்  நேற்று செவ்வாய்க்கிழமை  அம்மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.  

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இந்த மக்களுக்கான காசோலைகளை வழங்கிவைத்தார். 119 பேருக்கு இக்கொடுப்பனவிற்கான காசோலைகள் வழங்கிவைக்கப்பட்டன.

வாகரை பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் நா.திரவியம்,  பிரதேசசபைத் தவிசாளர் க.கணேசன், வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மாவட்ட முகாமையாளர் ஜெகநாதன், வாகரை பொலிஸ் பொறுப்பதிகாரி ஜ.பி.ஜெயசீலன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X