Suganthini Ratnam / 2011 நவம்பர் 30 , மு.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜிப்ரான்)
மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக நெற்செய்கைக்கென 160 கோடி ரூபாய் பெறுமதியான உரம் மானியமாக வழங்கப்பட்டு வருதாக கமநல அபிவிருத்தித் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட உதவி ஆணையாளர் டாக்டர் ஆர்.ருஷாங்கன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெல்லாவெளி கொக்கட்டிச்சோலை, வவுணதீவு, செங்கலடி, கிரான், வாகரை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் அதிகமான ஏக்கர் நிலப்பரப்பில் பெரும்போக நெற்செய்கை பண்ணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மாவட்டத்திலுள்ள 17 விவசாய பிரிவுகளிலும் உரம் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. 3500 ரூபாய் பெறுமதியான உரம் 350 ரூபாய்க்கே விநியோகிக்கப்பட்டு வருகின்றது. ஒரு ஏக்கருக்கு மூன்றரை மூடை உரம் வழங்கப்படுதாகவும் ஆர்.ருஷாங்கன் தெரிவித்தார்.
.jpg)
28 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago