2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

மாணவர் ஊக்குவிப்பு விழா

Kogilavani   / 2011 டிசெம்பர் 01 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு, கல்குடா வலயத்திலுள்ள பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தின் முதலாவது மாணவர் ஊக்குவிப்பு விழா இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

பாடசாலை அதிபர் க.கதிர்காமநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,   கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் முதன்மை அதிதியாக கலந்துகொண்டார். மேலும்,  மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கல்குடா வலய கல்விப் பணிப்பாளர் சுபா சக்கரவர்த்தி, பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன், அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
இதன்போது முதலமைச்சரின் தாயார் கல்குடா கல்விப் பணிப்பாளருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன் முதலமைச்சர் மலர்கொத்து வழங்கி கௌரவித்தார். மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .