Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஜூன் 15 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
இலங்கைத் தமிழ் படைப்பாளிகளை கௌரவிக்கும் முகமாக எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வருடாவருடம் வழங்கும் தமிழியல் விருது 2011க்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தில் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வாழும் இலங்கை படைப்பாளிகளுக்கு தமிழியல் வித்தகர் பட்டமும் விருதும் பணப்பரிசும் வழங்கப்பட்டு வருகின்றது.
பின்வரும் விருதுகள் இம்முறை வழங்கப்படவுள்ளன:
உயர் தமிழியல் விருது - இலக்கிய மேம்பாட்டுக்கு உரமாய் உழைத்த மிகச் சிறந்த மூத்த படைப்பாளி ஒருவருக்கு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் ஸ்தாபகர் ஓ.கே.பாக்கியநாதன் உயர் தமிழியல் விருது வழங்கப்படும்.
தமிழியல் விருதும் தமிழியல் வித்தகர் பட்டமும் - தமிழிலக்கிய மேம்பாட்டுக்கு உரமாய் உழைத்த மூத்த படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள் 5 பேருக்கு தமிழியல் வித்தகர் பட்டத்துடன் தலா 15ஆயிரம் ரூபா பணப்பரிசும் வவுனியூர் ஸ்ரீ இராமகிருஷணா - கமலநாயகி தமிழியல் விருது.
மிகச்சிறந்த நூலுக்கான தமிழியல் விருது – 2010 ஆம் ஆண்டு வெளிவந்த மிகச்சிறந்த நூல் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபா பொற்கிழியுடன் சுவாமி விபுலானந்த அடிகளார் தமிழியல் விருது.
சிறந்த நூல்களுக்கான தமிழியல் விருது – 2010 ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த 13 நூல்களுக்கு தலா 10ஆயிரம் ரூபா பொற்கிழியுடன், புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை தமிழியல் விருது, புலவர்மணி ஆ.மு.ஷரிபுதீன் தமிழியல் விருது, கல்விமான் க.முத்துலிங்கம் தமிழியல் விருது , அருட்கலைவாரிதி சு.சண்முகவடிவேல் தமிழியல் விருது, சிவநெறிப்புரவலர் சீ.ஏ.ராமஸ்வாமி தமிழியல் விருது , நாவலாசிரியை பவளசுந்தரம்மா தமிழியல் விருது , கலைஞர் ஓ.கே.கணபதிப்பிள்ளை தமிழியல் விருது , பம்பைமடு நாகலிங்கம் -நல்லம்மா தமிழியல் விருது , வண பிதா சந்திரா அடிகளார் தமிழியல் விருது , பதிவாளர் நாயகம் எஸ்.முத்துக்குமாரன் தமிழியல் விருது , வித்திய கீர்த்தி ந.சந்திரகுமார் தமிழியல் விருது , செந்தமிழ் செல்வர் சு.ஸ்ரீகந்தராஜா தமிழியல் விருது , பம்பைமடு கந்தையா இரஞ்சிதமலர் தமிழியல் விருது ஆகியன வழங்கப்படவுள்ளன.
இதேவேளை சிறந்த 2 குறுந் திரைப்படங்களுக்கு கவிஞர் கல்லாறன் கணபதிப்பிள்ளை தமிழியல் விருது, துறையூர் வே.நாகேந்திரன் தமிழியல் விருது, ஆகியன வழங்கப்படுவதுடன், மிகச் சிறந்த ஓவியர் ஒருவருக்கு 10ஆயிரம் ரூபா பொற்கிழியுடன் ஓவியர் கிக்கோ தமிழியல் விருதும் வழங்கப்படவுள்ளன.
இவ்விருதுகளுக்கு இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள இலங்கையைத் தாயகமாகக் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 2010ஆம் ஆண்டு தை மாதம் முதலாம் திகதியில் இருந்து டிசம்பர் 31ஆம்திகதிவரையான காலத்துக்குள் வெளியான நூல்கள், குறுந்திரைப்படங்களுடன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
நாவல், சிறுகதை, கவிதை, குழந்தை இலக்கியம், சிறுவர் இலக்கியம், விடலை இலக்கியம், நாடகம், அறிவியல், ஆய்வியல், வரலாறு, பழந்தமிழ் இலக்கியம், மொழிபெயர்ப்பு, இன நல்லுறவு இலக்கியம், தொழில்நுட்பம் என பல்துறை சார்ந்த நூல்களையும் 30 நிமிடங்களுக்குட்பட்ட பல்துறைசார்ந்த குறுந்திரைப்படங்களையும் தேர்வுக்காக அனுப்பி வைக்கலாம்.
தேர்வுக்காக பெயர் முகவரி தொலைபேசி இலக்கங்களுடன் சுயமாகத் தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன், நூல்கள் எனின் 4 பிரதிகளும், இறுவட்டுக்கள் எனில் இரண்டு பிரதிகளும் அனுப்பிவைக்கப்பட வேண்டும்.
'ஓ.கே.குணநாதன், மேலாளர், எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல.64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, மட்டக்களப்பு, இலங்கை' எனும் முகவரிக்கு 10.08.2011க்கு முன்னர் விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
50 minute ago
14 Jul 2025