2021 ஜனவரி 27, புதன்கிழமை

கிழக்கு மகாண சபையின் கீழ் உள்ள அரச அலுவலர்களின் மேன் முறையீட்டு முடிவுகள் வெளியாகியுள்ளன

A.P.Mathan   / 2012 நவம்பர் 11 , மு.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜதுசன்)

கிழக்கு மகாண சபையின் கீழ் உள்ள அரச அலுவலகங்களில் கடமைபுரியும் முகாமைத்துவ உதவியாளர்கள், சாரதிகள், சிற்றூழியர்கள், நிகழ்ச்சித்திட்ட உதவியாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் ஆகியோருக்கான வருடாந்த இடமாற்றப் பட்டியலின் மேன் முறையீட்டு முடிவுகள் வெளியாகியுள்ளன.

கிழக்கு மாகாண பொதுநிர்வாக அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்ட இவ் இடமாற்றப் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் மேன் முறையீடுகள் ஏற்கப்பட்டு இடமாற்ற சபையினால் அங்கீகரிக்கப்பட்ட இடமாற்றங்களுக்கு மேன்முறையீடுகள் மேன்முறையீட்டு சபையினால் பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

பொதுநிர்வாக திணைக்களத்தினால் மிக விரைவாக, இம்முறை இடமாற்ற முடிவுகளும் மேன்முறையீட்டு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன.

ஜனவரி 1ஆம் திகதி நடைமுறைப்படுத்தப்படவுள்ள இடமாற்றத்திற்கான, இடமாற்ற முடிவுகள், மேன்முறையீட்டு முடிவுகள் ஒக்டோபர் மாதத்திலேயே வெளியிடப்பட்டுள்ளன.

துரிதமான, சிறப்பான, இந்நடைமுறையை பிரதி பிரதம செயலாளர் (நிர்வாகம்) கலாமதி பத்மராஜா ஏற்படுத்தியுள்ளார்.

கலாமதி பத்மராஜாவின் சிறந்த நிர்வாக திறமையே இம்முறை துரிதமாக இடமாற்றப் பணிகளும் மேன்முறையீட்டுப் பணிகளும் நடைபெற காரணம் ஆகும். பிரதி பிரதம செயலாளர் (நிர்வாகம்) கலாமதி பத்மராஜா மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் சிரேஸ்ட பிரதேச செயலாளர் என்பதுடன் யுத்தம், சுனாமி, வரட்சி, இடம்பெயர்வு, வெள்ளம் போன்ற நிலைமைகளில் துரிதமாக, நேர்மையாக செயற்பட்ட அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .