2021 ஜனவரி 23, சனிக்கிழமை

ஓட்டமாவடியில் இரத்ததான முகாம்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 11 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் இணைந்து கல்குடா தவ்ஹீத் ஜமாஅத்தின் சமூக சேவைப்பிரிவு ஏற்பாடு செய்த இரத்ததான முகாம் ஓட்டமாவடியில் நேற்று சனிக்கிழமை  நடைபெற்றது.

ஓட்டமாவடி எம்.பி.சீ.எஸ். வீதியிலுள்ள  ஜமாஅத்தின் தலைமையகமான தாருஸ்ஸலாம் பள்ளிவாசலின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இவ்இரத்ததான முகாமில் கல்குடாத் தொகுதி முஸ்லிம் பிரதேசத்திலிருந்து நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர்.

கல்குடா தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு எதிர்பார்த்ததைவிட அதிகமான சகோதரர்கள் கலந்துகொண்டதாக  சமூக சேவைப் பிரிவின் இணைப்பாளர் மௌலவி எஸ்.எச்.அறபாத் ஸஹ்வி தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .